வாக்சின் எதுக்கு போடனும் ? அது எப்படி வேலை செய்யுது?
வாக்சின் எதுக்கு போடனும் ? அது எப்படி வேலை செய்யுது? இதெல்லாம் டிவில, ஊர்ல எல்லாருக்கும் புரியற மாதிரி சொல்லனும். சொல்ற வரைக்கும் பயம் இருக்கும். நான் படிச்ச வரைக்கும் சொல்றேன். முதல்ல வாக்சின் எதுக்கு போடனும் ?
இப்ப உடம்புக்குள்ள எப்பவுமே ஒரு தெலுகு பட வில்லன் அடியாள் கூட்டம் இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி. வைரஸ் மாதிரி உங்க உடம்புக்குள்ள எது நுழைஞ்சாலும் மூளை உடனே அலாரம் அடிச்சு இந்த கூட்டத்தை அனுப்பும். அடிச்சு துவம்சம் பண்ணுங்கடான்னு. உங்க உடம்போட முதல் அட்டாக்.
முக்காவாசி வைரஸுக்கு இதுவே போதும் சளி மாதிரி. ஆனா இதுல ஒண்ணுமே ஆகாம சிரிக்கற வைரஸுக்கு அடுத்த கட்டமா ஒரு ஸ்பெசல் ஐட்டம் இருக்கு. T cells. இதுக ஒரு குறிப்பிட்ட வைரஸ் அழிக்க தயாரா இருக்கறவங்க. கோட்டு போட்டு கூலிங்களாஸ் போட்ட ஹைபை கொலைகாரங்க.
உடம்பு முதல் அட்டாக்ல தோத்த உடனே, உள்ளே வந்த வைரஸோட ஒரு செல்லை தூக்கிட்டு ஓடி போய் வரிசையா நிக்கற T cell ஒவ்வொருத்தனையா கேக்கும். இவனை உனக்கு தெரியுமா தெரியுமான்னு. ஒரே ஒரு T cell ஆமான்னு சொன்ன உடனே அந்த ஒருத்தனை கோடி பேர் ஆக்கி சண்டைக்கு அனுப்பும். ரெண்டாவது அட்டாக்.
ஆனா எந்த T செல்லுக்குமே புதுசா வந்தவனை தெரியலைன்னா உடம்பு உடனே வொர்க் ஷாப் போய் புது வைரஸுக்கு ஏத்த புது T செல்லை உருவாக்க ஆரம்பிக்கும். ஏற்கனவே இருக்கற ஒருத்தனை கோடியாக்கறதை விட புதுசா பண்ண கொஞ்சம் டைம் எடுக்கும்.
உடம்பு இதெல்லாம் பண்ற வரைக்கும் உள்ளே வந்த வைரஸ் சும்மா இருக்குமா ? அது பல மடங்காகும். ஏற்கனவே இருக்கற முட்டாள் அடியாள் கூட்டம் T செல் தயராகி வர்ற வரை அதை தடுக்க முயற்சி பண்ணும். வைரஸ் வளர்ந்து எது வைரஸ் எது உங்க செல்னு தெரியாத அளவு ஆகிட்டா சண்டைல நம்ம தோத்துட்டோம்னு அரத்தம்.
தோத்துட்டா உங்க உடம்போட அடியாள்கள் உங்க உடம்பையே அடிக்கும். அழிக்கும். சீரியஸ் ஆகிருவீங்க. தடுக்க தெம்பிருக்காது. ஆனா வரப்போற வைரஸுக்கு ஏற்கனவே உடம்பு தயரா இருந்தா ? ஏற்கனவே ஒரு T செல் இருந்தா ? இந்த சண்டைல நாம ஈஸியா ஜெயிக்கலாம். அதுக்குதான் வாக்சின்.
வாக்சினோட ஐடியா என்னான்னு இருக்கறதுலயே சோப்ளாங்கி செத்துப்போன கரனோ வைரஸை எடுத்து, இல்லைன்னா கரோனோ வைரஸ் மாதிரியே முகவெட்டு இன்னொருத்தனை எடுத்து உடம்புக்குள்ள விட்டு இவனை அடிச்சு பழகுங்கடான்னு உங்க உடம்பை தயார் பண்றது.
இது சோப்ளாங்கி வைரஸ்னு ஊசி போடறவனுக்கு தெரியும். உங்க உடம்புக்கு தெரியாது. அது உண்மையான வில்லன்தான் வந்துட்டான்னு மேல சொன்ன எல்லாத்தையும் பண்ணும். ஜெயிச்சுரும். மிச்சமிருக்க T செல்லை பீரோல வச்சு ரெடியா இருக்கும்.
இதுல ரெண்டு டைப் இருக்கு. ஒண்ணு ஏற்கனவோ இருக்க கரோனோ வைரஸையே புடிச்சு , அதோட ஸ்பைக் ப்ரோட்டினை ஷேவ் பண்ணி செரைச்சு, மொக்கையாக்கி உடம்புக்குள்ள அனுப்பறது. அது Covaxxin. கரோனோ மாதிரி இருக்கற adeno virus ஐ புடிச்சு கமலஹாசன் பாதிரி மேக்அப் பண்ணி அனுப்பறது CovidShield.
ரெண்டுமே நல்லதுதான்.. இதுல ஏன் வாக்சின் போடறதால உடம்பு சரியில்லாம போகுது ? தோக்கறமோ ஜெயிக்கறோமோ முதல்ல சண்டை செய்யனும்னு உங்க உடம்போட எதிர்ப்பு சக்தி கெளம்பறதாலதான். ஆனா ஒண்ணு நீங்க மறக்க கூடாது, சோப்ளாங்கி வைரஸுக்கு உங்க உடம்பு தயாராகறப்ப வர்ற எதிர்வினைகளை விட உண்மையான வில்லன் வர்றப்ப வர்ற எதிர்வினைகள் பல மடங்கு அதிகமா இருக்கும். ஆனா அவனுக்கு அடிக்க தெரியும். வாக்சின் போட்டு உங்களுக்கு காய்ச்சல் வருதுன்னா, வாக்சின் போடமா கரோனோ வந்தா அதை விட அதிகமா வரும்.
வாக்சின் போடறதால ரொம்ப ரொம்ப அபூர்வமா வர்ற ஒரு சைட் எபெக்ட் blood clot ரத்த கட்டி.. ஆனா அதுக்கும் வாக்சினுக்கும் சம்பந்தம் இருக்கானு ஆராய்ச்சி பண்றாங்க. ஆனா ஒண்ணு கன்பார்மா சொல்றாங்க. உங்களுக்கு வாக்சின் போட்டு clot வந்தா கரோனோ வந்தாலும் அது வரும் வாயப்புகள் பல மடங்கு அதிகம்.
இப்ப உங்களுக்கு இருக்கற கேள்வி ? நீங்க எதை தேர்வு செய்ய போறீங்க ? கட்டுபடுத்தபட்ட சோப்ளாங்கி கரோனோ வைரஸையா ? வெறியோட இருக்க உண்மையான வைரஸையா ? ரொம்ப சுலபமான தேர்வுதான் இல்லையா. சோப்ளாங்கியை சுமந்து வர்ற வாக்சின்தான்.
ஏன் 65+ கரோனோ முதல்ல போடறாங்க? ஏன் அவங்களை ரொம்ப மோசமா பாதிக்குது? ஏன்னா அவங்களோட அடியாள் கூட்டத்துக்கு பல வருஷமா சண்டை போட்டு வயசாகிடுச்சு. ஏற்கனவோ வியாதி இருக்கறவங்க கதையும் அதுதான் அவங்க அடியாள் எல்லாம் வேற இடத்துல இருப்பாங்க. அதனால அவங்க முதல்ல போட்டுக்கனும்.
குழந்தைகளுக்கு, யங்ஸ்டருக்கும் போடனும்தான். ஆனா அவங்களோட எதிர்ப்பு சக்தி பொதுவா வேகமானதுங்கறதால உண்மையான வைரஸை கூட அவங்க எதிர்கொள்ளலாம். ஆனா அதுவும் அவங்களோட பரம்பரையா வர்ற ஜீன்கள், இதுவரை கண்டுபிடிக்கபடாத ஏதோ ஒரு வியாதி இதனால பாதிப்பு ஆகலாம். ரொம்ப கம்மி ஆனா ஆகலாம்.
கடைசியா இது ரொம்ப ரொம்ப புது வாக்சின். பொதுவா வாக்சின் தயாரிக்க 10 வருஷம் ஆகும். இதை ஒரே வருஷத்துல பண்ணிட்டாங்க. அதுக்காக தூங்காம கொள்ளாம பல ஆயிரம் பேர் வேலை செஞ்சருக்காங்க. இது வரைக்கும் கோடிக்கணக்கில வாக்சின் போட்டு சைட் எபெக்ட் வந்த எண்ணிக்கை ரொம்ப ரொம்ப ரொம்ப கம்மி.
நம்ம ஊர்ல CoVaxxin peer review இன்னும் வெளியாகலைங்கறது ஒரு குறை. ஆனா ஆபத்துக்கு பாவமில்லை. ஆனா அதையும் பல கோடி பேர் போட்ருக்காங்க. யாருக்கும் எதுவும் ஆகலை. ஞாபகம் வைக்க வேண்டியது ஒண்ணு. நீங்க வாக்சினுக்கு பயந்தா கரோனோவுக்கு அதை விட ஆயிரம் மடங்கு பயப்படனும். கவனமா இருக்கனும்.
– Thanks to வினோத் @altappu